Tamilnadu

“ரஜினி, விஜய் கொரோனா தடுப்புக்கு அதிக நிதி வழங்கியது யார்?” - கொலையில் முடிந்த ரசிகர் சண்டை!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா காலங்களில் மக்களுக்குத் தேவையான நிதி உதவுகளை சிலர் நேரடியாவும் அரசுக்கும் அளித்தும் அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்துவருகின்றனர். அவர்களது ரசிகர் நடிகர்கள் அளிக்கும் நிவாரண நிதி உதவியை வைத்து பிற நடிகர்களை கிண்டல் செய்வது போன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் நடந்து வருகிறது. இப்படி சமூகவலைதளங்களில் போட்டுவந்த ரசிகர்களின் சண்டை நிஜவாழ்க்கையிலும் தொடங்கி ஒரு உயிரையே எடுத்துள்ள சோக சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் திணேஷ்பாபு. இரண்டு பேர் அப்பாவும் தினக்கூலித் தொழிலாளர்கள். 22 வயதான இருவரில் யுவராஜ் என்பவன் விஜய் ரசிகராகவும், திணேஷ்பாபு என்பவன் ரஜினி ரசிகராகவும் இருந்துள்ளனர்.

ஊரடங்கால் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாக கதை பேசி நாட்களை கழித்து வந்தவர்கள் நேற்றைய தினம் மது கிடைக்கவும் ஒன்றாக சேர்ந்து திணேஷ்பாபு வீட்டின் அருகில் குடித்துவிட்டு விளையாட்டாக பேசிக் கொண்டுள்ளனர். அப்போது கொரோனா நிவாரண நிதி விஜய் தான் அதிகம் கொடுத்தாக யுவராஜூம், ரஜினிதான் அதிகம் கொடுத்ததாக திணேஷும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபோதையில் இருந்த இருவருமே நிதானம் இழந்து வாக்குவாத்தில் ஈடுபட்டதால் அது ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ரஜினி பற்றி பேசியதற்காக யுவராஜை திணேஷ் கீழே பிடித்து தள்ளியுள்ளார். பின்புறமாக கீழே விழுந்த யுவராஜ் தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் மயங்கியுள்ளார்.

இதைடையே சத்தக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துப் பார்த்த போது யுவராஜ் உயிரிழந்துள்ளார். பின்னர் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்குவந்த போலிஸார் யுவராஜ் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் திணேஷைக் கைது செய்த போலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Also Read: ஊரடங்கை நீட்டிக்காவிடில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும்... இந்தியாவுக்கு TIMES ஆய்வு எச்சரிக்கை!