Corona Virus

ஊரடங்கை நீட்டிக்காவிடில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும்... இந்தியாவுக்கு TIMES ஆய்வு எச்சரிக்கை!

மே 22ம் தேதிவாக்கில் இந்தியாவில் கொரோனாவால் 75 ஆயிரம் பேர் பாதிக்கக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் 21,125 பேராக உள்ளனர். அதில், 4,193 பேர் குணமாகியும், 672 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த வைரஸ் தொற்று சமூக அளவில் பரவிவிட்டால் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்பதால், தேசிய ஊரடங்கு இரண்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்டு தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

ஊரடங்கை நீட்டிக்காவிடில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும்... இந்தியாவுக்கு TIMES ஆய்வு எச்சரிக்கை!

ஆனால், வைரஸ் பாதிப்பு இருமடங்காக ஆவதற்கு 3.4 நாட்கள் என இருந்த நிலையில் தற்போது 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இப்படி இருக்கையில், மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27ம் தேதி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பெரும்பாலும் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அறிவிப்புகள் கூடியவிரைவில் வெளிவரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், டைம்ஸ் நாளிதழ் சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

ஊரடங்கை நீட்டிக்காவிடில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும்... இந்தியாவுக்கு TIMES ஆய்வு எச்சரிக்கை!

அதில், மே மாதத்தின் மத்தியில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடையும் என்றும், மே 22ம் தேதி சமயத்தில் 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கை மே 15 வரை நீட்டித்தால், செப்டம்பர் 15ம் தேதியின் போதுதான் கொரோனா இல்லாத இந்தியாவா உருவாகும். ஆனால், மே 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஜூன் மாதத்தின் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனாவை ஒழிக்க முடியும் என டைம்ஸ்-புரொடிவிட்டி ஆய்வு கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories