Tamilnadu

“கொரோனா சிகிச்சை அளிக்க 18 மருத்துவமனைகள் தேர்வு” : பாதிப்பு 400-ஐ தாண்டியது - அரசின் பணிகளில் தொய்வு?

தமிழகத்தில் கோரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறையினர் தங்களது பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்தொற்றுள்ளவர்கள் இருப்பதாக கண்டறியப்படுள்ளனர். ஆனாலும் அனைத்து மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்து வந்தது.

இதனால் எதிர்கட்சிகள் அனைத்து மாவட்டத்திற்கும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் 18 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்களம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனைகளில் பணிகள் முடிந்து தற்போது சிகிச்சைக்கு தயாராக இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட மருத்துவமனைக்கு உடனே உரிய நெறிமுறைகளுடன் மாற்றப்பட வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 400 ஐ தாண்டியுள்ள நிலையில் அரசு தற்போதுதான் மருத்துவமனையை தேர்வு செய்துள்ளது பெரும் அலட்சிய நடவடிக்கை என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அனைத்து கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை அதிகரிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “அது ஒரு அதி ஆபத்து நோய்க்கிருமி; கொரோனா சோதனை மையங்களிலேயே தோற்று ஏற்படும் அபாயம்” : எச்சரிக்கும் ICMR!