Tamilnadu
“ரஜினியை தொடர்ந்து கதிர் நியூஸ் முடக்கம்” : போலி செய்தி பரப்புவோரை குறிவைக்கும் ட்விட்டர்! #FakeNewsMedia
கொரோனா அச்சுறுத்தலின் தாக்கத்தை அவ்வபோது உலக மக்களுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பங்கினை சமூக வலைதளங்கள் மூலம் பலர் செய்து வருகின்றனர். அதேப்போல் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளை செய்திகளையும் சமூக வலைதள நிறுவனங்களே செய்துவருகின்றனர்.
அந்த வகையில் ட்விட்டர், தனது பங்களிப்பை சிறப்பான முறையில் செய்து வருகின்றது. இன்று சமூகவலைதளங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ட்விட்டரும் ஒன்று. இந்நிலையில் சமீபகாலமாக ட்விட்டரில் போலி பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு போலி பயணர்களை முடக்கம் பணியில் ஈடுபட்டிருந்த ட்விட்டர் நிறுவனம், தற்போது கொரோனா பற்றியும் போலி செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி வருபவர்களையும் ட்விட்டரில் இருந்து வெளியேற்றும் பணியில் இறங்கியுள்ளது.
ட்விட்டரின் இந்த நடவடிக்கையால் ,போலி செய்தி மற்றும் தகவல் வெளியிட்ட பா.ஜ.க ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் முடக்கப்பட்டது. கொரோனா விசயத்தில் தீவிர கண்காணிப்பில் உள்ள ட்விட்டர் நிறுவனம், நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் கொரோனா பற்றி தவறான தகவலை பரப்பியதற்காக அந்த வீடியோவை நீக்கியுள்ளது.
இந்த சம்பவம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினியை தொடர்ந்து பா.ஜ.க ஆதரவு செய்திகளையும், இந்துத்வா கருத்தும் மற்றும் அறிவியலுக்கு புறம்பாக போலி செய்திகளை வெளியிட்டு வரும் கதிர் நியூஸ் என்ற செய்தி தளத்தின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.
பா.ஜ.கவின் நிர்வாகியால் இயக்கப்பட்டும் கதிர் நியூஸ் கொரோனா பற்றியும் மற்றும் பல போலி செய்திகளை தொடர்சியாக பரப்பியற்காக, ட்விட்டர் விதிமுறையின் படி மூன்று நாட்கள் முடக்கியுள்ளது. ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!