Tamilnadu
“டொரினாவா... கொரோனாவா..?” - வைரஸையே வீம்பாகக் கலாய்க்கும் வடிவேலு!
தொடர்ச்சியாக படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழகத்தில் இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கொண்டாடப்படும் நடிகர் வடிவேலு. அவரது பேட்டிக்காக ரசிகர்களும், ஊடகத்தினரும் எப்போதுமே காத்திருப்பார்கள். அதற்குக் காரணம் அவரது ‘கலகல’ நகைச்சுவைப் பேச்சுதான்.
அந்தவகையில் நேற்றைய தினம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நடிகர் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அவர் பேசியது வைரலானது.
இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் வடிவேலு. அந்தச் சந்திப்பின் போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது ரஜினி மூலமாக அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு இனி அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றார்.
மேலும், ஒருவேளை கட்சி அரம்பித்தால் வானவில் வண்ணக் கொடியும், கொய்யாப்பழ சின்னமும் கொண்டு ஒரு கட்சியை துவக்கிவிடலாம் என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
கொரோனா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நமக்கு எந்த நோயும் வராது. அதற்குக் காரணம் நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைதான். அதேபோன்று உணவுப் பழக்கத்தை நாமும் கடைபிடிக்கவேண்டும். அதனைக் கடைபிடித்தாலே ‘டொரினாவோ கொரோனாவோ’ எதுவும் வராது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?