Tamilnadu
மு.க.ஸ்டாலின் அறிக்கை எதிரொலி: மின்வாரிய பணிக்கான ஆன்லைன் தேர்வு தமிழிலேயே நடத்தப்படும் என அறிவிப்பு!
மின்வாரியப் பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வு தமிழில் நடத்தப்படும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் ஆயிரத்து 300 மின் கணக்கீட்டாளர்கள் மற்றும் 500 இளநிலை உதவியாளர் பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் திட்டமிட்ட சதி என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே, கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில், ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் வாரிய தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கணக்கீட்டாளர் , உதவியாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு தமிழ் வழியில் நடத்தப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க மார்ச் 23-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!