Tamilnadu
கிராமங்களில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய்... காரணம் என்ன? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் !
நவீன காலத்தில் சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை (DIABETICS) ஃபேஷனாக நினைக்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு எளிதாக மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 50 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வந்த இந்த நீரிழிவு நோயால் தற்போது 30 வயதைக் கடந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேவேளையில் நகரங்களில் மட்டுமே பரவலாக இருந்த இந்த சர்க்கரை நோய் தற்போது கிராமப்புறங்களிலும் தொடர ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Dundee பல்கலைக்கழகத்துடன் இணைந்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கண்ட ஆய்வு குறித்து சென்னையில் நடந்த கருத்தரங்கில் பகிர்ந்தது.
அதில், செங்கல்பட்டு சூனாம்பேடு பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களில் வீடு வீடாகச் சென்று நீரிழிவு நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. 2006ம் ஆண்டு வெறும் 4.9 சதவிகிதமாக அந்த கிராமங்களில் இருந்த நீரிழிவு பாதிப்பு 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 13.5 ஆக உயர்ந்திருக்கிறது.
இதற்கு முழுமுதற் காரணம் காய்கறி, பழங்கள் என எதையும் எடுத்துக்கொள்ளாமல், அரிசி சாதம் மட்டுமே சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதுமே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீரிழிவு நோய் இருப்பதை அறிந்ததும் ஆரம்பகட்டத்திலேயே அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்தலாம். இல்லையெனில் சிக்கலுக்கே வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுப்பதோடு, மாவுச்சத்துகள் குறைந்த உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!