Tamilnadu
“CAAக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” : சென்னையில் லட்சக்கணக்கில் குவிந்த இஸ்லாமியர்கள்! (Album)
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய மக்கள், அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதன் படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி பேரணி தொடங்கியுள்ளது. இதில், லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கையில் No CAA, No NRC, No NPR என பதாகைகளையும் ஏந்தியும் தேசியக்கொடி ஏந்தியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
மேலும், குடியுரிமை சட்டம், என்.பி.ஆர்.,ம் என்.ஆர்.சி. போன்ற சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #PassAntiCAAResolutionADMK என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
- 
	    
	      
10,11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!