#CAA2019

பேரவையை முற்றுகையிடும் இஸ்லாமியர்கள் : போராட்டத்தை தடுக்க 10,000 போலிஸ் குவிப்பு - சென்னையில் பரபரப்பு!

தடையை மீறி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளதால் சென்னை வாலாஜா சாலை முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக இரவு பகல் பாராமல் போராட்டமானது நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாகச் சென்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

பேரவையை முற்றுகையிடும் இஸ்லாமியர்கள் : போராட்டத்தை தடுக்க 10,000 போலிஸ் குவிப்பு - சென்னையில் பரபரப்பு!

இதனால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் இந்தப் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு போராட்டமானது கண்காணிக்கப்பட உள்ளது.

இந்தச் சாலை முழுவதும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறி பேரணியில் ஈடுபடுபவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை பொறுத்து காவலர்கள் கூடுதலாக பணியில் ஈடுபட வாய்ப்பு என்று மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பேரவையை முற்றுகையிடும் இஸ்லாமியர்கள் : போராட்டத்தை தடுக்க 10,000 போலிஸ் குவிப்பு - சென்னையில் பரபரப்பு!

இதற்கிடையே, “எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், எத்தகைய தாக்குதல் நடத்தினாலும், எங்களுடைய போராட்டம் தொடரும், இந்த கறுப்புச் சட்டங்கள் கலைக்கப்படும் வரை எங்களுடைய போராட்டம் பல வடிவங்களில் தொடரும்” என போராட்டக்காரர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories