Tamilnadu

பொதுத்தேர்வுக்காக டிவி கேபிள் இணைப்பைத் துண்டித்த பெற்றோர் : விரக்தியில் 8ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

சென்னை தாம்பரத்த அடுத்த பீர்க்கன்கரணைப் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். எலக்ட்ரீசியன் பணி செய்துவரும் இருவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அரவிந்த கிருஷ்ணன் என்ற மூத்த மகன் 10 வகுப்பும், இளையமகன் அமுதீஸ்வரன் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்வு நேரம் வந்ததால் வீட்டில் இருந்த டிவி கேபிள் இணைப்பைத் துண்டிக்கப்போவதாக பெற்றொர் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு இரண்டு மகன்களும் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.

இரண்டு பேருக்கும் பொதுத்தேர்வு இருப்பதால் படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும் என்பதால் இவர்களின் தாய் சங்கீதா கேபிள் இணைப்பை துண்டித்துள்ளார். வியாழன்று பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த அமுதீஸ்வரன் வீட்டில் கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெற்றோர் நீண்ட நேரமான பிறகும் அறையில் இருந்து இளைய மகனிடம் இருந்து சத்தம் எதுவும் இல்லையே என சந்தேகம் அடைந்து கதவை தட்டி கூச்சலிட்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அறையின் கதைவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்தப்போது, படுக்கை அறையின் மேற்கூரை கம்பியில் சால்வை மூலம் தூக்குப் போட்டு உயிரிழந்த நிலையில் அமுதீஸ்வரன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்ட விரக்தியில் மாணவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சமூக வலைதங்களில் பெண் குறித்து அவதூறு கருத்து : இந்து மகா சபா ஊழியர்கள் 2 பேர் கைது - போலிஸ் அதிரடி!

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக் கொண்டுவந்ததே இதுபோல உயிரிழப்புக்கு காரணம் என்றும், விளையாடும் வயதில் தேர்வு என்று குழந்தைகளை அடைத்து வைப்பது இதுபோல விபரீதத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.