Tamilnadu
பெரியகோவிலுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் போராட்டம் நடக்கும் - எச்சரிக்கும் அமைப்புகள் !
தஞ்சை பெரிய கோயில் மீட்புக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
23 ஆண்டுகளுக்கு பின், வரும் பிப்ரவரி 5ம் தேதி நடத்தப்பட உள்ள தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழ்மரபு வழி நடத்திட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மரபுவழி குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? - விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!
-
இதை படிக்க 3 நாட்கள் எதற்கு? Prepare Well Next Time : முதலமைச்சர் பதிலுரைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் திட்டமிட்டு அனுமதி மறுத்த சபாநாயகர் : தர்ணா - தி.மு.க வெளிநடப்பு!
-
த.வெ.க அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி : நடந்தது என்ன?
-
ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!