Tamilnadu
‘பரோட்டா மாஸ்டர் ஆக பயிற்சி’ - மதுரை இளைஞரின் நூதன முயற்சி!
மதுரை மாவட்டம் கூடல்நகரைச் சேர்ந்தவர் முகமது காசிம். இவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக சிக்கந்தர்சாவடி பகுதியில் பரோட்டா கடையை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 படித்துள்ள முகமது காசிம் தங்கள் கடைக்கு புதிதாக வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு பரோட்டா தாயாரிக்க சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இந்த செய்தி மதுரை பரோட்டா கடை உரிமையாளர்களுக்கு தெரியவர, தங்கள் கடையில் பணி புரிந்துவரும் இளைஞர்களுக்கும் பரோட்டா தயாரிக்கச் செல்லிக்கொடுக்கும் படி கேட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி மாநிலத்தில் பல பகுதிகளில் பரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் புதிதாக இந்த தொழிலுக்கு வரும் இளைஞர்களுக்கு பரோட்டா தயாரிக்க சொல்லிக்கொடுப்பது என முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி தற்போது ‘செல்ஃபி கோச்சிங் சென்டர்’ என்ற பெயரில் பரோட்டா தயாரிப்பதற்கான பயிற்சி மையம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதுதொடர்பான விளம்பரங்களை மதுரை மாவட்டம் முழுவதும், பல ஆட்டோக்களில் விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரம் காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும், வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களும் இனைந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் கூறுகையில், “உலக நாடு முழுவதும் பரோட்டா பிரியர்கள் அதிகரித்துவிட்டார்கள். அதனால் பரோட்டா கடைகளுக்கு பரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இன்றைக்கு பரோட்டா மாஸ்டர்களுக்கு 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். அதனால் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என நினைத்தே இதனைத் தொடங்கியுள்ளோம்.
இந்த பயிற்சி மையத்திற்கு மதுரை மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 100 பேருக்கு மேல் பயிற்சி அளித்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பயிற்சி மையத்தில் சேர நுழைவுக் கட்டணம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், சில பிரத்யோக பயிற்சிக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!