Tamilnadu

‘ஏா் இந்தியா விமான சேவை திடீர் ரத்து!’

சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு ஏா் இந்தியாவின் அலையன்ஸ் ஏா் விமான நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக விமானங்களை இயக்கி வந்தது.

இந்நிலையில், அவற்றில் 6 விமானங்கள் இன்றிலிருந்து நவம்பா் 30ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. இந்த 6 விமானங்கள் தினமும் சென்னையிலிருந்து மதுரை,திருச்சி,கோவை ஆகிய நகரங்களுக்கு சென்றுவிட்டு,மீண்டும் அங்கிருந்து சென்னை திரும்பிவரும். இதனால் மொத்தம் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் குறைந்த அளவிலே கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வந்தன. இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “திணறிவரும் இந்திய பொருளாதாரத்தால் மதிப்பீட்டை 5% ஆக குறைத்த எஸ்.பி.ஐ” : அதிர்ச்சியில் மோடி அரசு!

இது சம்பந்தமாக ஏா் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், விமானங்கள் பற்றாகுறை காரணமாக, போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வந்த இந்த விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கக்கூடிய மற்ற வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தனர். மேலும், அலையன்ஸ் ஏா் நிறுவனத்தால் சென்னையிலிருந்து யாழ்ப்பானம் (ஜாப்னா) வரை இயக்கப்படும் விமானம் வாரத்தில் 3 நாட்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.

சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை மார்ச் மாதத்திற்குள் தனியாரிடம் விற்க முடிவு எடுத்துள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா - விரைவில் விற்பனைக்குத் தயார் ! : மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி வைத்தியம்