Tamilnadu
“அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை” - சென்னை வானிலை மையம் தகவல்!
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அதேபோல கடலோர மாவட்டங்களான, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களான சிவகங்கை, சேலம், விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸும் பதிவாக வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல் குஜராத்திலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் மாகா புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதியில் மட்டும் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகே தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !