Tamilnadu
அடுத்த 48 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம் எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, கோயமுத்தூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
தற்போது பெய்துவரும் மழை நாளை வரை நீடிக்கும் என்றும், 2 நாட்களுக்குள் படிப்படியாக மழைப்பொழிவு குறையும் எனவும் கூறிய அவர், அதன் பின்னர் மீண்டும் தீவிரமான மழை பெய்யக்கூடும் என்றார்.
மேலும், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் கேரளா, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு குமரிக்கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி எட்டயபுரத்தில் 14 செ.மீ, கொடைக்கானலில் 13 செ.மீ, மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!