Tamilnadu
வன்கொடுமை செய்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இரட்டையர்கள் : 11-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அவரின் பெற்றோர் மற்றும் தம்பியுடன் சேடப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஊர் திருவிழா என்பதால் சிறுமியின் பெற்றோர்கள் ஊரிலே வீட்டுவிட்டு வீடு திருப்பியுள்ளனர்.
பாட்டி வீட்டில் இருந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். இரவு நெருங்கியும் சிறுமி வராததால் பாட்டி மற்றும் அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இரவு நேரம் மழை, வேறு பெய்ததால் சிறுமியை தேடியதை நிறுத்திவிட்டு வீடுத்திருபியுள்ளனர்.
மறுநாள் காலை தோட்டத்திற்குச் சென்றவர்கள் முட்புதரின் கிழே தலை நசுங்கி சடலமாக கிடந்த சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சேடப்பட்டி போலிஸார் சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் ஊர்கார் ஒருவர், மாதவன் என்பவன் சிறுமியிடன் பேசியதாகக் கூறியுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸார் மாதவனைக் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமியைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
மேலும் கொலை குறித்து வெளியான தகவலில், தெலங்கானாவைச் சேர்ந்தவர் மாதவன் என்றும் அவருக்கு மது என்ற சகோதரரும் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் இரண்டுபேரும் இரட்டையர் எனக் கூறப்படுகிறது. தெலங்கானவில் இருந்து தமிழகம் வந்தவர்கள், மதுரையில் உள்ள கிராமத்தில் ஒலிபெருக்கி வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்திருக்கின்றனர்.
இதில் மாதவன் காதல் திருமணம் செய்து, 10 நாட்களுக்கு முன்பு தான் அவரது மனைவிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி அடிக்கடி பாட்டி வீட்டுக்கு வருவதைப் பார்த்த மாதவன் சிறுமியின் மீது ஆசைக் கொண்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி தனியாக செல்வதைப் பார்த்த மாதவன் சிறுமியிடம் பேச வேண்டும் எனக் கூறி அருகில் உள்ள குன்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அண்ணன் என நம்பிச் சென்ற சிறுமியிடம் மாதவன் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி மாதவனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றுள்ளார். எதிர்பாதவிதமாக கீழே விழுந்த வன்கொடுமை செய்துள்ளான் மாதவன். பின்னர் அங்கு வந்த மதுவும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
திருவிழா காரணமாக ஒலிபெருக்கி சத்தம் இருந்ததால் சிறுமியின் அலறல் சத்தம் கேட்காமல் போனதாகவும். மயக்கமடைந்த சிறுமி உயிரோடு இருந்தால் ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிடுவார் என எண்ணி அருகில் இருந்த பாறைக் கற்களை சிறுமியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து போலிஸாரிடம் பிடிபட்ட இரட்டையர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !