Tamilnadu
லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை : திருவாரூர் அ.ம.மு.க பிரமுகரிடம் போலிஸார் விசாரணை!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 பேர் கொண்ட கும்பல் நகைக்கடையில் கைவரிசை காட்டியுள்ளது என முதற்கட்ட விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை கொள்ளை தொடர்பாக மணிகண்டன், முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.
நகைக்கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவாரூர் முருகன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீராத்தோப்பைச் சேர்ந்த பிரதாப் என்ற நபரை பிடித்து திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், புதிய திருப்பமாக திருவாரூரைச் சேர்ந்த அ.ம.மு.க பிரமுகரான திருமாறன் என்பவரிடம் லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக தனிப்படை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!