Tamilnadu
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு... TNPSC குரூப் 2 & 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
மொத்தம் 200 மதிப்பெண்களில் 100 கேள்விகள் பொது அறிவாகவும், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என மொழித்தாளகவும் இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு வினாக்களாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னர் குரூப் 2 தேர்வுக்கு மட்டுமே முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. குரூப் 2ஏ தேர்வில் கொள்குறி வினாக்களுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அடுத்த சுற்று நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. தற்போது குரூப் 2ஏ-வுக்கும் முதல்நிலைத் தேர்வு எழுதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!