Tamilnadu
“மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு” : காவிரிக் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 40,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தங்கள் உடைமைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என யாரும் ஆற்றில் இறங்கி குளிப்பதையோ, புகைப்படம் எடுப்பதையோ, கால்நடைகளைக் குளிப்பாட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றின் கரையோர அனைத்து பகுதிகளிலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மற்றும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!