Tamilnadu
பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு... துவங்கிய சில நிமிடங்களிலேயே காலியானதால் தென்மாவட்ட பயணிகள் கவலை!
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகியிருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்றுதுவங்கியது. இன்று முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை பொங்கல் பண்டிகைக்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 14ம் தேதி போகியிலிருந்து 17ம் தேதி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ம் தேதியான திங்கட்கிழமையைத் தவிர்த்து ஜனவரி 11ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதன்படி, ஜனவரி 10ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்வோர் இன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11ம் தேதி செல்வோர் நாளை முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதி துவங்க உள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில், சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சிக்கு செல்வதற்கான வைகை, பாண்டியன், நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களின் டிக்கெட்கள் மட்டும் முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களுக்குள் காலியாகி விட்டன.
இதனால் முன்பதிவு செய்யக் காத்திருந்த மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆண்டுதோறும் இந்தப் பிரச்னை ஏற்பட்டு வருவதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“சுயமரியாதைமிக்க மகளிர் பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் வீழ்த்தப்போவது உறுதி!” : உதயநிதி திட்டவட்டம்!
-
“பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!” : கனிமொழி எம்.பி சூளுரை!
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?