Tamilnadu
இனி கலை & அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கும் கலந்தாய்வு... தமிழக அரசு முடிவு!
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக கவுன்சிலிங் நடத்தப்படுவது போன்று இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கும் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்றாக, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுவது போல கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த யோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஏற்றுக்கொண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குநருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!