Tamilnadu
சென்னையில் பரவும் டெங்கு : ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தினமும் 4 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதி!
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினந்தோறும் 3 அல்லது 4 பேர் வரை டெங்கு நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாக சென்னை அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, “மருத்துவமனையில் பருவக்காலங்களில் உருவாகும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு 30 லிருந்து 40 புறநோயாளிகளும் 10 லிருந்து 15 உள் நோயாளிகளும் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கான பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிப்பும் மேல் சிகிச்சைக்காக ஐ.சி.யு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.
அனைத்து மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. நூறு படுக்கை வசதி கொண்ட பிரத்யேக வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு 3 பேர் வீதம் டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில் இங்கு டெங்கு பாதிப்பு உயிரிழப்பு எதுவும் நடக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பரவிவரும் டெங்கு நோயை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், திருவண்ணாமலைப் பகுதிகள் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை வழங்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!