Tamilnadu
ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க பாகிஸ்தான் திட்டம்?
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியிலும் மற்றும் பாகிஸ்தான், சீனா நாடுகளிடையும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அதனையடுத்து, இந்தியாவுடனான நட்புறவை முறியடித்துக் கொள்வதாக அறிவித்தது. பாகிஸ்தானுக்காக அனுப்பப்பட்ட இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவில் இருந்து செயல்பட்டு வந்த வாகன சேவைகளையும் நிறுத்தியது. இதன்மூலம் இருநாடுகளிடையான பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை முதலாவதாக கையில் எடுத்த பாகிஸ்தான் சர்வதேசப் பிரச்சனையாக மாற்ற உள்ளதாக அறிவித்தது.
முதலில் ஐ.நாவை பாகிஸ்தான் நாடியது. இது இரு நாடுகளுடனான பிரச்சனை இதில் ஐ.நா தலையிடாது. மேலும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு பிரச்சனையாக்க மாற்ற தொடர்ந்து முயற்சி செய்கிறது.
அதாவது, காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்திற்கு, பாகிஸ்தான் எடுத்துச் செல்ல உள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முன்னெடுத்துச் செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. காஷ்மீர் பிரச்னை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் நடக்கும் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து குரல் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப, பாகிஸ்தான் முயன்றால், அதை முறியடிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!