Tamilnadu
ராணுவத் துறையின் நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் பா.ஜ.க ? : போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்
மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க முனைப்புடன் செயல்படுகிறது. சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க உலகலாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உருக்காலை தொழிற்சாலை ஊழியர்கள் 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அதனைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடும் வேலையில் பா.ஜ.க இறங்கியுள்ளது. பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களைப் பொதுத் துறை நிறுவனமாக மாற்ற வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு வரவுள்ளது.
இந்த முடிவை எதிர்த்தும், நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் பாதுகாப்புத்துறையே இருக்கவேண்டும் என கோரிக்கை வைத்து 30 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சென்னை ஆவடியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சார்ப்பில் ஒருவர் கூறியதாவது, “இந்தியா முழுவதும் பாதுகாப்புத் துறையில் கீழ் ராணுவ உடை தொழிற்சாலை, டேங்க் , இன்ஜின் தயாரிக்கும் நிறுவங்கள் போன்ற 41 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் 82 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களாக 40 ஆயிரம் பெரும் வேலை செய்து வருகிறோம். இந்த நிறுவனங்களை பொதுத்துறையாக மாற்றுவதன் மூலம் தனியாருக்கு விற்க மோடி அரசு முயற்சிப்பதாகக் தெரிகிறது” என குற்றம் சாட்டினார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!