Tamilnadu
பா.ஜ.க திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடாவிடில் தமிழகத்தின் பெரும்பகுதி அழிந்துவிடும் - வைகோ பேச்சு!
விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து தமிழக மக்கள் போராடாவிட்டால் தமிழகம் அழிந்துவிடும் என வைகோ பேசியுள்ளார்.
விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை முதல் பெங்களூரு வரை விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிராகவும் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதனை, மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வைகோ தொடங்கி வைத்தார். இந்தப் போராட்டத்தில், கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடினால் கூட மோடி அரசு கண்டுகொள்ளாமல், அவர்களை சந்திக்க அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது; இது கண்டனத்திற்குரியது.
விளைநிலங்களை அழிக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் தமிழகத்தின் பெரும்பகுதி அழியும் நிலைக்கு உள்ளாகும் என வைகோ தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் போராட்டத்தில் தி.மு.க. மக்களவை எம்.பி. ராமலிங்கம் மற்றும் பாரிவேந்தர் ஆகியோரும் பங்கேற்றனர். நாளையும் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!