Tamilnadu
தமிழகத்தில் கண்டிப்பாக டிக்-டாக் செயலி தடை செய்யப்படும் - அமைச்சர் மணிகண்டன் !
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதம் நடைப்பெற்றது. அப்போது பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய முடியும். அதேசமயத்தில் தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக்-டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
சாகச வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவு செய்ய முயற்சித்து பல்வேறு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே கண்டிப்பாக தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
Also Read
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!
-
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
-
”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!
-
மாற்றுத்திறனாளிகள் மாமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற விண்ணப்பிக்கலாம்! : முழு விவரம் உள்ளே!
-
”காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்க கூடாது” : காவலர்களுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்!