Tamilnadu
அத்தி வரதரை வி.ஐ.பி வரிசையில் அமர்ந்து கும்பிட்ட ரவுடி : அனுமதி பெற்றது எப்படி ? விசாரணை தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து அத்தி வரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டு கோவிலில் வழிபாட்டுக்காக வைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அந்த வழிபாடு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
அத்தி வரதர் சிலையை வழிபட நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இருப்பினும் அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிலும் சாமானிய மக்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் நிற்க, மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி அனுமதி மூலம் பலர் தரிசித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வி.ஐ.பி பாஸ் மூலம் முன் வரிசையில் அமர்ந்து அத்தி வரதரை கும்பிட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரிச்சியூர் செல்வம் மீது கொலை , ஆட்கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலிஸ் என்கவுண்டரில் இருந்து மூன்று முறை கடைசி நேரத்தில் தப்பித்த ரவுடியான வரிச்சியூர் செல்வத்திற்கு வி.ஐ.பி அனுமதி எப்படி கிடைத்தது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
காவல்துறையில் இருந்து அவருக்கு அனுமதி பெற்றுத் தந்தது யார்? வரிச்சியூர் செல்வம் கோவிலுக்கு வந்தபோது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் யார் யார்? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கி உள்ளது.
அதேநேரம் சாமானியர்கள் மிகவும் சிரமப்படும் நேரத்தில், ரவுடிக்கு வி.ஐ.பி பாஸ் கிடைத்த தகவல் வெளியானதால், பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!