Tamilnadu
தொடங்கியது பொதுப்பிரிவினருக்கான பி.இ / பி.டெக் ஆன்லைன் கலந்தாய்வு!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவினருக்கான இன்றைய கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் 9,872 ரேங்க் வரை பெற்ற மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 ஆன்லைன் மையங்களுக்குச் சென்றோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10-ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வு நிறைவடைந்ததும் ஜூலை 11-ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். கல்லூரிகளில் சேர்க்கையை மாணவர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் உறுதிசெய்ய வேண்டும்.
ஜூலை 13-ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரியைத் தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஜூலை 28-ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!