Tamilnadu
பா.ஜ.க கொடி வண்ணம் பூசப்பட்ட அரசு பள்ளி இருக்கைகள்! கடும் எதிர்ப்பை அடுத்து அகற்றம்
நாடு முழுவதும் தனது ஆர்.எஸ்.எஸ். கொள்கை, சித்தாந்தங்கள் மற்றும் இந்து மதத்தை மட்டுமே பரப்புவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது மோடி தலைமையில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு.
அதில் ஒரு பங்காக, சிறுபான்மையினர் மீதான மதவெறி தாக்குதலிலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் தீண்டாமை எனும் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
என்ன செய்தாலும் தமிழகத்தில் தன்னால் காலுன்ற முடியாது என்று திட்டவட்டமாக புரிந்துவைத்துள்ள பா.ஜ.க, அ.தி.மு.கவை தனது கைபாவையாகக் கொண்டு இங்கும் தனது மதவாதக் கும்பலை உட்புகுத்த முயற்சிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்த்தியுள்ளது.
கடந்த 22ம் தேதி அன்று, விழுப்புரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புக்கான தொடக்கவிழா நடைபெற்றது. இதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
அங்கு எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஏற்றார் போல், கார்ட்டூன்கள் சுவற்றில் வரையப்பட்டிருந்தன. அதில் ஒரு பகுதியாக குழந்தைகள் அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகளில் பா.ஜ.கவின் கொடி வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பச்சை மற்றும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது.
இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் உலாவியதை அடுத்து இச்செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து தற்போது பா.ஜ.க கொடி வண்ணத்தில் பூசப்பட்ட இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!