Tamilnadu
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தால் வாகனங்களை பறிமுதல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ், பிரகாஷ், குமாரசாமி ஆகியோர் விவசாய நிலத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை கொண்டு பைப்புகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாகவும், அதை லாரிகள் மூலம் பல இடங்களுக்கு கொண்டு போய் விற்பதாகவும், இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
மேலும், அந்த இடத்தில் அனுமதி பெற்று நீர் எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், தண்ணீர் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகிறா அல்லது சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும், பொதுமக்கள் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஜூலை 1-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த இடத்தில் உள்ள மோட்டார்கள், தண்ணீரை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்தவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!