Tamilnadu
ஃப்ரிட்ஜ் வெடித்ததில் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பரிதாப பலி!
பத்திரிகையாளர் பிரசன்னா நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சேலையூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் குளிர்சாதனப் பெட்டி வெடித்துள்ளது.
அந்த விபத்தில் சிக்கிய பிரசன்னா, அவரது மனைவி மற்றும் தாயார் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அதிகபடியான கரும்புகை வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது. அதை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் அந்தப் பகுதிக்கு வந்து தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தினர்.
போலீசார் இதுகுறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர் மின்வெட்டால் நிகழ்ந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பத்திரிக்கையாளர் பிரசன்னா, குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்தது சக பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!