Tamilnadu
இன்று தொடங்கியது பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு!
பி.இ. மற்றும் பி.டெக் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. உயர்கல்வித்துறையுடனான மோதலின் காரணமாக பொறியியல் கலந்தாய்வுக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதனால், இந்த ஆண்டு கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கியுள்ளது.
பொறியியல் கல்வி பயில விரும்பும் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், நாளை ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், 27-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது. தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளை முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!