Tamilnadu
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் : வானிலை மையம் எச்சரிக்கை!
வட மேற்கு திசை காற்று வலுவாக வீசுவதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும். எனவே, அனல் காற்று வீச வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
உருவாகிறது புயல் : எப்போது?.. எங்கே?... தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பா?
-
“மலைத்தேனின் சுவையைப்போல நம்மிடையே வாழ்வார்!” - திமுக MLA பொன்னுசாமி மறைவுக்கு துணை முதலமைச்சர் அஞ்சலி!
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!