Tamilnadu
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 9.12 மீட்டராக இருந்த நீர்மட்டம் 13.77 மீட்டராக சரிந்துள்ளது.
இதனையடுத்து, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 9 அடி வரை நீர்மட்டம் சரிந்துள்ளது.
காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 6 அடிவரையிலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது. அதேப்போல், பிற மாவட்டங்களில் 3 அடிவரை குறைந்துள்ளது.
இந்நிலையில், நாகை, திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சற்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!