Tamilnadu
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்
தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை 31 முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!