Tamilnadu
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று (ஜூன் 14) முதல் ஜூலை 14 வரை குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in / tnpsc.exams.net / tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
Also Read
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!