Tamilnadu
ஜல்லிக்கட்டு போராட்டம் போல், நீட் ரத்துக்காகவும் போராடுவோம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த மாணவிகளுக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய போராட்டக்காரர்கள், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.
பா.ஜ.கவின் மக்கள் விரோதத் திட்டங்களை எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஆமாம் சாமி போட்டு அனைத்தையும் நிறைவேற்றி வருவதையே மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடியது போன்று, நீட் ரத்துக்காகவும் போராட்டம் நடத்த அஞ்சமாட்டோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!