Tamilnadu
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு!
புதுச்சேரி சபாநாயகராக பணியாற்றி வந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அதனால் அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். பின்னர் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன் துணை சபாநாயராக இருந்த சிவக்கொழுந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
திராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!