Tamilnadu
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு !
சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உள்ளிட்ட இடங்களில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!