Tamilnadu
நாடுமுழுவதும் வந்த சுனாமியில் தமிழகம் மட்டும் சிக்கவில்லை - வைரமுத்து சூசகம்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 37 மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 38 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரிலும் தொலைப்பேசியிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, தமிழக மக்கள் கொண்டாட வேண்டிய ஒன்று. இது திராவிட சித்தாந்ததுக்கான வெற்றி" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் சுனாமி அலை பாய்ந்திருக்கிறது. ஆனால் அந்த சுனாமியில் தமிழகம் மட்டும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறது என தெரிவித்தார். அதாவது மோடியின் அலை தமிழகத்தில் எடுபடாது என்று சூசகமாக பேசியிருக்கிறார். தி.மு.கவின் வெற்றி வியப்புக்குரியது என்றும், பா.ஜ.கவின் வெற்றி திகைப்புக்குரியது என்றும் அவர் கூறினார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!