Tamilnadu
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பம் : ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்!
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியாற்ற முடியும். இந்தச் சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடக்க வேண்டிய இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் இந்த ஆண்டு முதல் தேர்வு நடத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கு தாள் 1, அதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் விண்ணப்பித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தாள் 2. அதில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!