Tamilnadu
தமிழகத்தில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மே 19-ம் தேதியுடன் தேர்தல் நிறைவடைகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியே அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், சில பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக, 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்திருந்தார்.
இந்தநிலையில், தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!