Tamilnadu
அவிநாசி அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 20 வயது பெண் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நான்கு பேர் பெண்ணின் உறவினர்கள் இருவரை அழைத்துக் கொண்டு ஹைதராபாத் செல்லும் வழியில் அவிநாசி அருகே ஆலம்பாளையம் பகுதியில் மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு உறவினர் வினு கோபால், போலிசார் ராஜேஷ், விநாயகம், அருண, அனில்குமார் என 5 பேரும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !