Sports
ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் உலககோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த முதலில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனை லிட்ச்பீல்ட் சதம் விளாசி அசத்த அந்த அணி 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.
இதுவரை கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டியில் ஆண்கள், பெண்கள் என எந்த பிரிவிலும் 300க்கும் அதிகமான ரன்களை யாரும் சேஸ் செய்து வென்றதில்லை என்ற நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் குவித்த வீராங்கனையான பிரதிகா ராவல் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடாத நிலையில் அது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
அவருக்கு பதில் தொடக்க வீராங்கனையாக காலம் புகுந்த சபாலி வர்மா 10 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் களம்புகுந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மந்தனாவும் 24 ரன்களில் வெளியேற, கேப்டன் ஹர்மன்ப்ரீத் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர்.
ஹர்மன்ப்ரீத் 89 ரன்களில் வெளியேற, ஜெமிமா சதமடித்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இறுதிக்கட்டத்தில் தீப்தி, ரிச்சா கோஸ், அமஜ்ஜோத் ஆகியோர் அதிரடியாக ஆட எட்டவே முடியாது என கருதப்பட்ட 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சிறப்பாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். தனது சதத்தைக் கூட கொண்டாடாத ஜெமிமா அணி வெற்றிபெற்றபின்னர் கண்ணீர் வடித்தார். அதனைத் தொடர்ந்து தனது தந்தை இவான் ரோட்ரிக்ஸை கட்டி அணைத்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் சம்பவங்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்தவரான ஜெமிமா ரோட்ரிக்ஸின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ் குழந்தைகளிடையே கட்டாய மத பிரச்சாரம் செய்ததாக இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் ஜெமிமாவின் உறுப்பினர் புகப்பெற்ற அந்தஸ்தை ஜிம்கானா கிளப் ரத்து செய்தது. இந்திய அணியில் ஜெமிமா சேர்க்கப்பட்டதற்காக வலதுசாரி அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது அணியை தன் தோல் மீது சுமந்து ஜெமிமா இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை கொண்டுசென்றுள்ளார்.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !