Sports
சாம்பியன்ஸ் டிராபி : இந்திய அணி அறிவிப்பு... தமிழக வீரருக்கு வாய்ப்பு - முழு விவரம் உள்ளே !
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் ஐசிசிக்கு பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா மோதும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இறுதியில் இந்திய அணியின் கோரிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி நெருங்கியுள்ள சூழலில் அதில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்துள்ளது.
இதில் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், பும்ராவும் அணியில் இடம்பிடித்துள்ளார். அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), கில் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால்,ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங்.
Also Read
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!