Sports
தமிழ்நாடு அரசு எனக்கு ஊக்கம் அளித்ததோடு நிறைய உதவிகளையும் செய்துள்ளது - செஸ் சாம்பியன் குகேஷ் நெகிழ்ச்சி!
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள டி.குகேஷ் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உலக செஸ் சாம்பியன் ஆவது என்னுடைய சிறுவயது கனவு. என் கனவை நிஜமாக்கி வீட்டுக்கு வருவதில் எனக்கு சந்தோஷம். எனது வெற்றியால் நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வளவு பெருமையாக உள்ளது என்பதை பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இந்த போட்டிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. வேறு மாதிரியான எமோஷன் இருந்தது, 14 ஆவது சுற்றில் வெற்றி வரும்போது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. எதை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும், செஸ் ஒரு சிறந்த விளையாட்டு, நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதும் காதலித்து என்னுடைய போட்டிகளை விளையாடுவேன். இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும்.
14 ஆவது கூற்றில் எனக்கு சற்று சாதகம் இருக்கும் என்று நினைத்தேன். எனவே அதற்கு தயாராகவே நான் இருந்தேன். உலக செஸ் சாம்பியன்ஷி போட்டியில் முதல் முறையாக ஆடுகிறேன் என்பதால் சற்று பதற்றம் இருக்கும் என்று எனக்கு தெரியும். நான் நிறைய நல்ல முடிவுகளை எடுக்கவில்லை. ஆனால் நல்லது நடக்கும் என்று நினைத்தேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எப்பொழுது நான் வெற்றி பெற்றாலும் என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டி, பரிசு கொடுக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்றதால் கேண்டிடேட் செஸ் போட்டிற்கு தகுதி பெற முடிந்தது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமில்லாமல் நிறைய உதவிகளையும் செய்துள்ளார்கள். தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றி" என்று கூறினார்.
Also Read
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!