Sports
டிங் லிரேன் VS குகேஷ்... உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 மகுடத்தை சூடப்போவது யார்? - விறுவிறுப்பான போட்டி!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது சிங்கப்பூரில் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டித்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியன் டிங் லிரேன் - தமிழ்நாட்டின் குகேஷ் இருவரும் மவுன யுத்தம் நடத்தி வரும் இந்த தொடர், 14 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 13 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 14-வது அதாவது இறுதி சுற்று நடைபெறுகிறது. 13 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இருவரும் 2 வெற்றி, 9 டிரா என தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். முதலில் 7.5 புள்ளிகளை எடுப்பவர் சாம்பியன் பட்டம் வெல்வார் என்பதால் இன்றைய 14-வது சுற்று இருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றில் வெற்றி பெறுபவர் 7.5 புள்ளிகளை பெறுவர். ஆகையால் கடந்த சுற்றுகளை விட இன்றைய போட்டி கடும் சவாலாக இருக்கும். ஒருவேளை இன்றைய போட்டியும் டிராவில் முடிந்தால் இருவருக்கும் தலா அரை புள்ளிகள் வழங்கப்பட்டு 7 புள்ளிகளை பெறுவர். தொடரும் டிராவில் முடியும். 14 சுற்றுகள் முடிவில் இருவரும் சமபுள்ளிகளுடன் இருந்தால், நாளை டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும்.
டைபிரேக்கர் விதி :
* நான்கு போட்டிகளை கொண்ட ரேபிட் சுற்று நடத்தப்படும்.
* 15 நிமிடங்கள் கொண்ட போட்டியாகவும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடி வழங்கப்படும்
* முதல் சுற்றும் டிராவில் முடிந்தால் மீண்டும் நான்கு போட்டிகளை கொண்ட ரேபிட் சுற்று நடத்தப்படும்.
* ஆனால் இந்த சுற்று 10நிமிடங்களை கொண்டதாகவும் கூடுதலாக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 5வினாடி வழங்கப்படும்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!