Sports

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் கேப்டன், துவக்க வீரர் யார்- பயிற்சியாளர் கம்பீர் கூறியது என்ன?

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. பெங்களுரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அதனைத் தொடர்ந்து புனேவில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்தது. பின்னர் மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி 3 போட்டிகளிலும் தோற்று சொந்த மண்ணில் இந்தியா White Wash ஆனது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று அந்நாட்டு அணியோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதனிடையே தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்திய அணியின் தோல்வி குறித்தும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

abhimanyu easwaran

அதற்கு பதிலளித்த கம்பீர், " நியூசிலாந்து அணிக்கு எதிராக நான் முழுவதுமாக வீழ்த்தப்பட்டோம் என்பதை மறுக்கவில்லை. எங்கள் மீதான அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் இதில் இருந்து நாங்கள் முன்னேறி செல்வோம். இந்திய அணியில் மிக சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சியளிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்பது உறுதியாகவில்லை. அவர் விளையாடாத பட்சத்தில் கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவர் துவக்க வீரராக களமிறங்குவார். அதே போல துணை கேப்டன் பும்ரா அணியை வழிநடத்துவார். பிளேயிங் லெவனில் யாரை ஆட வைப்பது என முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

Also Read: ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்கள் திரும்பத் தரப்படும் - இலங்கை புதிய அதிபர் உறுதி !