Sports
"தோல்விக்குக் காரணம் பயிற்சி இல்லாததா? நன்றாக விளையாடாததா?" - சச்சின் டெண்டுல்கர் கேள்வி !
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி எளிதில் வெற்றபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பெங்களுரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து புனேவில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்தது.
அதைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி 3 போட்டிகளிலும் தோற்று சொந்த மண்ணில் இந்தியா White Wash ஆனது. இதன் மூலம் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியே சந்தித்திராத இந்திய அணியின் வெற்றிப்பயணத்துக்கு நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், தோல்விக்குக் காரணம் பயிற்சி இல்லைததா? அல்லது நன்றாக விளையாடாததா என இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், "சொந்த மண்ணில் 3 - 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாகதான் இருக்கிறது.
தோல்விக்குக் காரணம் என்ன என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டியது கட்டாயம். தோல்விக்குக் காரணம் பயிற்சி இல்லைததா? அல்லது நன்றாக விளையாடாததா? என்பதை நாம் உணரவேண்டும். முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் நன்றாக விளையாடினார். ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!