Sports
இந்திய அணி எப்படி இதனை செய்கிறது ? இதை ICC சோதனை செய்யவேண்டும் - பாக். முன்னாள் வீரர் கோரிக்கை !
நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்தியா இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியது.
தொடர்ந்து அமெரிக்க அணியை வீழ்த்திய இந்தியா, இறுதி லீக் ஆட்டத்தில் கனடா அணியை சந்தித்தது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டி நடைபெறாத நிலையில், லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபார வெற்றிபெற்ற இந்திய அணி, வங்கதேச அணியையும் எளிதில் வீழ்த்தியது. அதனைத் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய தனது பிரிவில் முதல் இடம்பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி பந்தை சேதப்படுத்தி அதன்மூலம் வெற்றிபெறுகிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் காக் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் 16வது ஓவரை வீசுகிறார். ஆனால் அப்போதே அவருக்கு ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கிறது. இவ்வளவு சீக்கிரம் ஒரு பந்து எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்?
அர்ஷ்தீப் 15வது ஓவரில் பந்தை ரிவர்ஸ் செய்தால் இதற்கு முன்பாக ஏதோ நடந்துள்ளது. எனவே அவர் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க நடுவர்கள் தங்களை இது தங்களை திறந்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பாகிஸ்தான் பவுலர்கள் இதை செய்திருந்தால் அது மிகப்பெரிய பிரச்சனை ஆகியிருக்கும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?